திங்கள், 14 மே, 2012

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊரைப் பற்றியும் சாலியர் இனத்தை பற்றியும்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ஊரைப் பற்றியும் சாலியர் இனத்தை பற்றியும்
இது பெருமைக்கான பதிவு ,
கர்வத்துக்கான பதிவு அல்ல.
நன்றி (saliyas.com)
ஸ்ரீவில்லிபுத்தூர்:கோதை பிறந்த ஊர்;கோவிந்தன்(மகாவிஷ்ணு)வாழும் ஊர்;தமிழ்நாடு அரசாங்கத்தின் சின்னமாம் கோபுரம் இருக்கும் ஊரும் இதுதான். கர்மவீரர் காமராஜர் சட்டமன்ற உறுப்பினராக ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்றுஜெயித்துத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனார்.இந்தியாவிலேயே பனை ஆராய்ச்சி நிலையம் இருக்கும் ஒரே ஊரும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்.தென் தமிழ்நாட்டில் முதல் தனியார் பல்கலைக்கழகம் கலசலிங்கம் பல்கலைக்கழகம் தோன்றியதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களில்(தசாவதாரம்)மூன்றாவது அவதாரமான வராக அவதாரம் உருவானதும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில் தான்.மகாவிஷ்ணுவை வழிபடுவதில் சிறந்த பக்தர்களாக இருப்பவர்கள் ஆழ்வார்கள்.அந்த ஆழ்வார்களில் பெரியாழ்வார்,ஸ்ரீஆண்டாள் எனப்படும் நாச்சியாரம்மன் என இரண்டு ஆழ்வார்கள் பிறந்த ஒரே புண்ணியஸ்தலமும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூர்தான்.திருப்பாவை என்னும் வைஷ்ணவப்பாடல் தொகுப்பு பிறந்ததும் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரில்தான்.தமிழ்நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய தனியார் நூலகம் பென்னிங்டன் பொது நூலகம் இருப்பதும் இங்கேதான்.புதுவைத்தலம் என்ற பழைய பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூருக்கு உண்டு.இந்தபுதுவைத்தலம் என்ற பெயர் இந்த ஸ்ரீவில்லிபுத்தூரின் தெற்கு எல்லையில் அமைந்திருக்கும் அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவிலின் பெயரே ஆகும்.சுமார் 1400களில் கட்டப்பட்ட திருக்கோவிலான இந்த சிவாலயம்தான் விருதுநகர் மாவட்ட்த்திலேயே இருக்கும் ஒரே ஒரு பழமையான சைவ திருக்கோவில் ஆகும்.உலகத்திலேயே சாம்பல் நிற அணில் சரணாலயம் இருப்பதும் ஸ்ரீவில்லிபுத்தூரின் வனப்பகுதியான செண்பகத்தோப்பில்தான்!!!

33 வார்டுகளுடன்,இரண்டு பழமையான கோவில்களுடன் சிவ மற்றும் வைணவ திருத்தலங்களுடன் ஸ்ரீவில்லிபுத்தூர் இன்று கல்விநகரமாகவேத் திகழ்கிறது.இந்த ஊரின் அமைதிக்கு இங்கிருக்கும் இறைசக்திகளும்,அமைதியை விரும்பும் சாலிய இனமும் காரணம் என நிரூபிக்கமுடியும்.
சாலியர்

--
சால் என்றால் துணி என்று தூய தமிழில் அர்த்தம்.இயர் என்றால் துணியை இயற்றுபவர்கள்(உருவாக்குபவர்கள்) என்று அர்த்தம்.இப்படித்தான் நமக்கு சாலியர் என்று ஜாதிப்பெயர் வந்தது.
நான் கேள்விப்பட்டவரையிலும்,பஞ்சாப்பில் இருக்கும் ஜாலியன்வாலாபாக் என்ற இடம்தான் நமது பூர்வீகமாக இருந்தது கிபி 1000 வரையிலும்!
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்புவரை மன்னர்களின் அரண்மனையில் சாலியர்கள் முக்கியப்பொறுப்புக்களில் இருந்தனர்.அரபுநாட்டிலிருந்து வாங்கப்படும் புதிய குதிரைகளை போருக்கும்,அணிவகுப்பிற்கும் தயார்படுத்தும் பணியில் இருந்தனர்.அந்த ஜீன் இன்னும் சாலிய ரத்தங்களில் ஓடுவதால்தான், சாலியர்களில் பெரும்பாலானவர்கள் ஆசிரியர்களாகவும்,பிரபலமான ஜோதிடர்களாகவும் இருக்கின்றனர்.

சாலியர்களின் குணங்கள் எல்லோருக்கும் உதவுதல்,எல்லோரிடமும் உண்மையை மட்டுமே பேசுதல்,தமது குடியிருப்புக்களில் அடைக்கலம் தேடி வருபவர்களின் குடும்பத்தாரை தமது சொந்த மகன் மகள் போல பாவித்தல்,எங்கும் எப்போதும் நேர்மையாக இருத்தல்,ஊர் நிர்வாகத்தில் தனது சொந்தங்கள் பிரச்னையைக் கொண்டு வந்தாலும் நியாயமாக தீர்ப்பு வழங்குதல்,பசியென்று வந்தவர்களுக்கு உணவும்,இருப்பிடமும் அளித்தல் .
சாலியர் என்று தேடினால்,பஞ்சாப்பில் ஆரம்பித்து,தமிழ்நாடு,இலங்கை வரையிலும் சாலியர்கள் சிதறிக்கிடக்கின்றனர்.
கேரளாவில் பத்மசாலியர்கள் ஒருங்கிணைந்து அரசியலில் வெற்றிக்கொடி கட்டிக்கொண்டிருக்கின்றனர்.தென் தமிழ்நாட்டில், வள்ளியூர்,நாகர்கோவிலில் பத்மசாலியர்கள் அதிகமாக வாழ்ந்துவருகின்றனர்.தவிர,சாலியர்கள்,பட்டாரியர்கள்,பட்டு சாலியர்கள்,அடவியர்கள்,சவுராஷ்டிரா சாலியர்கள் என பல்வேறு பெயர்களில் வாழ்ந்துவருகின்றனர்.
இதில் பட்டுசாலியர்கள்,பத்ம சாலியர்கள்,சவுராஷ்டிரா சாலியர்கள் தம்மை பிராமணர்களுக்குச் சமமாக நினைத்து உயர்வாக வாழ்ந்துவருகின்றனர்.
தனது ஜாதி மீது மட்டும் பாசம் இல்லாத சில ஜாதிகளில் சாலியர் ஜாதியும் ஒன்று என்பது நிர்வாணமான உண்மை.
சாலியர் என்பதில் பெருமிதம் கொள்வோம்
இணைந்தே இன்னும் பல சாதனை புரிவோம்

சனி, 10 மார்ச், 2012

buddy

புதுவரவு

பழகும் எழுத்து நடை


சோதனை முயற்சி